கோவை : இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கோவை ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் சித்ரா மனோகர் தெரிவித்துள்ளார்.

கோவை ரோட்டரி கிளப்பின் சார்பில் நடந்த 'ஏஸ் ஐ எவால்வ்' (As I Evolve) என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்யவைதிய பார்மஸியின் நிர்வாக இயக்குநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், கோவை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் என். சுந்தரவடிவேலு சிறப்பிக்கப்பட்டார். நிகழ்ச்சியில், கொண்டாஸ் ஆட்டோமெஷனின் நிர்வாக இயக்குநர் எஸ். சஞ்சய் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதைத் தொடர்ந்து, கோவை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் என். சுந்தரவடிவேலு பேசுகையில், " 'ஏஸ் ஐ எவால்வ்' திட்டமானது இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக இளைஞர்களின் சக்திகளை கொண்ட நமது நாட்டிற்கு முக்கியமானது பற்றி இத்திட்டம் எடுத்துரைக்கிறது," என்றார்.

மேலும், இத்திட்டத்தின் தலைவர் சித்ரா மனோகர் கூறுகையில், " இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மதிப்புமிக்க அமைப்புடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனிதஆற்றல் தேவைப்படுகிறது," எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.